Begin typing your search above and press return to search.
ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் 39 லட்சத்திற்கு நலத் திட்டங்கள்
ஆற்காடு வட்டாட்சியர்அலுவலகத்தில் ஜமாபந்தியில் 103பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS

ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் 39 லட்சத்திற்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில்1430 பசலி வரைவு ஆண்டுக்கான ஜமாபந்தி கடந்த 1ம் தேதி தொடங்கி 6 நாட்களாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ஜமாபந்தி நிறைவு பெற்றவுடன் நலதிட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், மாவட்டவருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி வரவேற்றார் .
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ,103 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 67ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் பாலாஜி, துணை வட்டாட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.