/* */

ரயிலில் சரக்குடன் வந்த வாலிபர் கைது

அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு பெங்களூரிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை ரயில்வே போலீஸார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ரயிலில் சரக்குடன் வந்த வாலிபர் கைது
X

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் அரசு உத்தரவால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுப் பிரியர்கள் மது கிடைக்காமல் அலைந்து வருகின்றனர். அதன் காரணமாக அண்டை மாநிலங்களான ஆந்திரா,கர்நாடகம் ஆகியவற்றிலிருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி சட்ட விரோதமாக இங்கு கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். அவர்களை மாவட்ட போலீஸார் கண்டறிந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்வதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளது.

இந் நிலையில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸார் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களில் சோதனை செய்து பயணிகளை விசாரித்து வத்தனர் அப்போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்லும் லால் பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. உடனே ரெயில் பெட்டிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சென்னைக்கு பயணிக்கும் பெங்களூரை சார்ந்த விஸ்வநாதன்(38) என்பவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர் அதில் சுமார் ₹10 ஆயிரத்து 500 மதிப்பிலான 64 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தார் .அதனைத்தொடர்ந்து போலீஸார் விஸ்வநாதனைக் கைது செய்து போலீஸார்மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 12 Jun 2021 9:20 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!