Begin typing your search above and press return to search.
திருவாடானை காேவிலில் கந்த சஷ்டி விழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகனுக்கு பால் குடம் எடுத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
HIGHLIGHTS

திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் காேவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் இன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகனுக்கு பால் குடம் எடுத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள அருள்மிகு சிநேகவல்லி தாயார் உடனாய ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முருகன் சன்னதியில் இன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்திற்குள் பால்குடம் எடுத்து சுற்றி வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்னர் அந்த பாலைக் கொண்டு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்.