/* */

கொழுந்தனை கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய அண்ணி. திடுக்கிடும் தகவல்

கொழுந்தனை சொந்த அண்ணியே கூலிப்படையை வைத்து போட்டுத் தள்ளினார். இந்தத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கொழுந்தனை கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய அண்ணி. திடுக்கிடும் தகவல்
X
பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கொட்டிய காரன் வலசை ஊரைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் ராஜேந்திரன் ( 29 ) நேற்று இரவு ஈசிஆர் சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் பலியானார்.

தகவலறிந்த காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடன் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக கேணிக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து படுகொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இந்த கொலைக்கான முதற்கட்ட விசாரணையில் கொலையான ராஜேந்திரனின் அண்ணன் மனைவி கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

மேலும் இது குறித்த விசாரணையை கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் அண்ணன் மனைவி தனது கொழுந்தனை போட்டுத் தள்ளிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 26 Aug 2021 12:56 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்