/* */

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள் தர்ணா போராட்டம்

முகாம் தனி துணை ஆட்சியர் லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்வாசிகள் தர்ணா போராட்டம்

HIGHLIGHTS

மண்டபம்  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள் தர்ணா போராட்டம்
X

ராமநாதபுரம் அருகிலுள்ள மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கைதமிழ் பெண்

முகாம் தனி துணை ஆட்சியர் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து மண்டபத்திலுள்ள இலங்கை தமிழர்மறுவாழ்வு வாசலில் தர்ணா போராட்டம் நடைபெற்றது

மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடு சேதமடைந்துள்ளதால் தனி துணை ஆட்சியரின் அனுமதியுடன் அருகே காலியாக இருந்த வீட்டை சொந்த செலவில் புனரமைத்து பயன்படுத்தி வந்த நிலையில் புதிதாக வந்த இலங்கை தமிழர்களுக்கு அதை ஒதுக்கி தனது உடமைகளை வெளியில் வீசியதாக கூறி இலங்கை ஈழத்தமிழ் பெண் ஒருவர் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இலங்கையில் ஏற்பட்ட இறுதிகட்ட போரின் போது இலங்கையில் வசித்த ஈழத் தமிழர்கள் பெரும்பாலானோர் தங்களது உயிர்களை காப்பபற்றிக்கொள்ள தனுஷ்கோடி வழியாக தமிழகத்துக்குள் அகதிகளாக வந்தனர். அவர்கள் அனைவகும் மண்டபம் அகதிகள் மறு வாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மண்டபம் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் 450 குடும்பத்தைச் சேர்ந்த 1419 இலங்கைத் தமிழர்கள் அங்கு வசித்து வருகின்றனர்.

மண்டபம் முகாமில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து வரக்கூடிய இலங்கை தமிழர்களை தங்க வைப்பதற்காக 147 வீடுகள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இறுதி கட்ட போரின்போது வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள பெரும்பாலோனோர் வீடுகள்; மிகவும் சேதம் அடைந்துள்ளதால், காலியாக உள்ள வீடுகளை மறுவாழ்வு முகாம் சிறப்பு தனி ஆட்சியர் அனுமதியுடன் தங்களது சொந்த செலவில் புனரமைத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அதில் பெரும்பாலான வீடுகளில் புதிதாக வரக்கூடிய இலங்கை தமிழர்களை தங்க வைக்கப்பட்டு அதில் தங்கி இருந்தவர்களை அப்புறப்படுத்தப்படுகின்றனர்.

இதனிடையே வவுனியாவிலிருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக வந்த ராசிய பேகம் என்பவரின் குடும்பத்தினர் வசித்து வரும் வீடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் பக்கத்தில் உள்ள வீட்டை சொந்த செலவில் புனரமைத்து வாழ்ந்து வருகின்றனர். அந்த வீட்டை நேற்று வந்த ஐந்து இலங்கை தமிழர்களுக்கு ஒதுக்கி இவரை குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை அகற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் மண்டபம் அகதிகள் மறு வாழ்வு முகாம் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாம் தனி ஆட்சியர் தொடர்ந்து இலங்கை முகாம்களில் வசிக்கும் மக்களிடம் லஞ்சம் கேட்பதாகவும் பணம் தராததால் முன்விரோதம் காரணமாக தங்களை அந்த வீட்டை விட்டு காலி செய்து வெளியே அனுப்பி விட்டதாகவும், பல வீடுகள் இன்னும் புனரமைக்கப்பட்டு நல்ல நிலைமையில் உள்ள வீடுகளை ஒதுக்காமல் தங்களது வீட்டை மட்டுமே ஒதுக்கி குழந்தைகளுடன் வெளியே அனுப்பியதாக இலங்கை பெண் குற்றச்சாட்டினார்.

தமிழக முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு மண்டபம் அகதிகள் மறு வாழ்வு முகாமை ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதே போல் தனி வீடு மற்றும் தனி பதிவு கேட்டு கடந்த திங்கள்கிழமை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் 3 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாரை சந்தித்து மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Updated On: 3 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!