/* */

கீழக்கரையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி

இராமநாதபுரம் அருகே கீழக்கரையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

கீழக்கரையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
X

இராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கம், கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி நடந்தது. முஹமது சதக் அறக்கட்டளை தலைவர் எஸ்.எம்.யூசுப் தலைமை வகித்தார். முஹமது சதக் அறக்கட்டளை செயலாளர் எஸ்.எம்.சர்மிளா, முஹமது சதக் அறக்கட்டளை பி.ஆர்.ஐ.செயல் இயக்குநர். ஹமீது இப்ராஹீம், அறக்கட்டளை இயக்குநர் எஸ்.எம்.ஜெ.ஏ. ஹபீப் முஹமது சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முஹமது சதக் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர். வி.சுரேஷ்குமார் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இராமநாதபுரம் காவல் கூடுதல்கண்காணிப்பாளர் சி.ஜெயசிங், கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் பி.டி.சுபாஷ், இராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் ஆ.ரவிசந்திர ராமவன்னி ஆகியோர் கோப்பை, சானறிதழ் வழங்கினர். மாவட்ட வாலிபால் சங்க பொருளாளர் ஏ.முகமது யூசுப் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

கல்லூரி அளவில் ஆடவர் பிரிவில் சி வி சி கீழக்கரை, கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி அணிகள், பெண்கள் பிரிவில் வேலு மனோகரன் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி கீழக்கரை முஹமது சதக்பொறியியல் கல்லூரி அணிகள் முதலிரண்டு பிடித்து கோப்பை வென்றன. பள்ளிகள் அளவில் ஆடவர் பிரிவில் சித்தார்கோட்டை முஹமதியா மேல்நிலைப்பள்ளி, தொண்டி ஐஎம்எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் பிரிவில் இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணிகள் முதலிரண்டு பிடித்து கோப்பை வென்றனர்.

Updated On: 2 April 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!