/* */

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. கூண்டோடு தி.மு.க.வில் ஐக்கியம்

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் தலைமையில் கூண்டோடு தி.மு.க.வில் இணைந்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தே.மு.தி.க.  கூண்டோடு தி.மு.க.வில் ஐக்கியம்
X

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட  தே.மு.தி.க.  நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னியிலையில் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்து வந்த நிலையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் தே.மு.தி.க. நிர்வாகிகள் கூண்டோடு நேற்று திருமயம் தொகுதி எம்.எல்.ஏ. வும் தமிழக சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி ஏற்பாட்டின் பேரில் சென்னையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

ராமசாமியுடன் தே.மு.தி.க. துணைச்செயலாளர் சிவகுமார், மாவட்ட பொருளாளர் சாமி.சுரேஷ், மாவட்ட மாணவர் அணி துணைச்செயலாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி நேரு மற்றும் அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் திருமயம் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச்செயலாளர் முத்துராமன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.


Updated On: 20 Oct 2021 1:03 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  2. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  3. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  4. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  5. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  6. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  7. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  8. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  9. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!