/* */

ஆடு திருடும் கும்பலைப்பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஆடுகளை காணவில்லை என பொதுமக்களின் புகார்கள் காவல் நிலையத்தில் குவிந்தன

HIGHLIGHTS

ஆடு திருடும் கும்பலைப்பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு
X

பைல் படம்

ஆடு திருடும் திருடர்களை பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பலர் வேலை இல்லாமல் இருந்ததால் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.அதில் முக்கியமானதாக இருந்தது ஆடு திருடும் தொழில். ஆடு திருடும் தொழிலில் ஈடுபட்ட திருடர்கள் பல்வேறு இடங்களில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்தனர்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஆடுகளை காணவில்லை என பொதுமக்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து காவல்துறையினர் ஆடு திருடும் கும்பலை தேடி வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் புதுக்கோட்டை அருகே ஆடு திருடும் கும்பல்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டர்.

அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் ஆடு திருடும் கும்பலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்து கைது செய்து வருகின்றனர்.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் காவல் துறையினர் ஆடு திருடும் கும்பலை பிடித்து ஆடுகளை பறிமுதல் செய்து ஆடு திருட பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நேற்று திருக்கோகர்ணம் மற்றும் அரிமளம் பகுதிகளில் ஆடு திருடும் கும்பலை காவல்துறையில் வளைத்து பிடித்து ஆடுகள் மற்றும் சொகுசு கார்களை பறிமுதல் செய்து ஆடு திருடி. 2 பேரை கைது செய்தனர். போலீஸாரின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 22 Jan 2022 3:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  6. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  9. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்