/* */

பொன்னமராவதியிலிருந்து திருச்சிக்கு புதிய பேருந்து: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

Ponnamaravathi To Trichy Bus Timings-புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து திருச்சிக்கு புதிய பேருந்தை சட்ட அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

பொன்னமராவதியிலிருந்து திருச்சிக்கு புதிய பேருந்து: அமைச்சர் ரகுபதி தொடக்கம்
X

பொன்னமராவதி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி புதிய பேருந்தை தொடக்கி வைத்த சட்ட அமைச்சர் ரகுபதி

Ponnamaravathi To Trichy Bus Timings-புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொன்னமராவதியிலிருந்து திருச்சி வரை புதிய வழித்தட பேருந்தினை துவக்கி வைத்து, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கல்தளம் மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தேர்வுநிலைப் பேரூராட்சிக்கு உட்பட்ட சிவன்கோவில் மேல வீதி, வடக்கு வீதியில் நமக்கு நாமே திட்டம் 2021-22ன் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கல்தளம் மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் பூமிபூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரானது சாலைகளில் தேங்காமல் வடிகால்கள் வழியாக வெளியேறும் வகையில் கட்டுமான பணிகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் பொன்னமராவதி தேர்வுநிலைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பொது மக்களின் நலன் கருதி பொன்னமராவதியிலிருந்து கொப்பனாபட்டி, ஆலவயல், பாலக்குறிச்சி, வளநாடு கைகாட்டி, விராலிமலை வழியாக திருச்சிக்கு காலை 8.15 மணிக்கும், இரவு 9.00 மணிக்கும் மறுமார்க்கமாக திருச்சியிலிருந்து காலை 3.00 மணி, 11.20 மணி, மாலை 4.15 மணிக்கும் பொன்னமராவதிக்கு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் மதியம் 1.40 மணிக்கு பொன்னமராவதியிலிருந்து உலகம்பட்டி, வி.புதூர், துவரங்குறிச்சி, வளநாடு கைகாட்டி, விராலிமலை வழியாக திருச்சிக்கு இயக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது அலுவல், மருத்துவ, கல்வி தொடர்பாக இப்பேருந்து சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே மஞ்சப்பை பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், துணை மேலாளர் (வணிகம்) சுப்பு, வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, பேருராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், மணிகண்டன், ஜெயபால், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 17 April 2024 9:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?