/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள்: அமைச்சர் வழங்கல்

ரூ.47 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்,பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள்: அமைச்சர் வழங்கல்
X

புதுக்கோட்டையில் நடந்த விழாவில், பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரியால் இயங்கும் நவீன மடக்கு சக்கர நாற்காலிகளையும்,சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ரூ.47.70 இலட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரியால் இயங்கும் நவீன மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடந்த நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரியால் இயங்கும் நவீன மடக்கு சக்கர நாற்காலிகளையும், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்ள். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27,55,500 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட 19 நபர்களுக்கு ரூ.20,14,000 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் நவீன மடக்கு சக்கர நாற்காலிகளையும் என மொத்தம் 52 பயனாளிகளுக்கு ரூ.47,69,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதனை உரிய முறையில் பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர்எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி அவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்;

Updated On: 27 April 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...