/* */

புதுக்கோட்டை காங்கிரஸ் சார்பில் முப்படைகளின் தளபதி பிபின்ராவத்க்கு அஞ்சலி

காங்கிரஸ் கட்சி சார்பில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தளபதி பிபின்ராவத்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை காங்கிரஸ் சார்பில் முப்படைகளின் தளபதி பிபின்ராவத்க்கு அஞ்சலி
X

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பல்வேறு கட்சியினர்.

இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் குன்னூர் அருகே செல்லும் பொழுது ஹெலிகாப்டர் திடீரென தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறியது.

இதில் பயணம் செய்த இந்தியவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 11 ராணுவ வீரர்கள் உடல் கருகி பலியானார்கள். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவையே உலுக்கிய இந்த துயர சம்பவம் நடந்தது அடுத்து, நாடு முழுவதும் இன்று பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று அண்ணா சிலை அருகே புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முருகேசன், நகர தலைவர் இப்ராகிம் பாபு தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய மாணவர் சங்கம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கருப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை திவ்யநாதன், ஆரோக்கியசாமி, குட்லக் மீரா, தனபதி, உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு