/* */

மாற்றுத்திறனாளி மாணவர்கள்-மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

அனைத்து வட்டாரங்களிலும் காலை 10. மணி முதல் பிற்பகல் 2. மணி வரை நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி மாணவர்கள்-மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், வட்டார அளவிலான 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் அனைத்து வட்டாரங்களிலும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளனர் .

24.01.2023 அன்று இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை, 27.01.2023 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அன்னவாசல், 01.02.2023 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கீரனூர், 03.02.2023 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருமயம், 07.02.2023 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரிமளம், 08.02.2023 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி, 09.02.2023 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆவுடையார்கோவில்.

10.02.2023 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி, 14.02.2023 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கறம்பக்குடி, 15.02.2023 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி திருவரங்குளம், 16.02.2023 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கந்தர்வகோட்டை, 17.02.2023 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விராலிமலை, 21.02.2023 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்-புதுப்பட்டி ஆகிய வட்டாரங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

எனவே புதிதாக தேசிய அடையாள அட்டை தேவைப்படுவோர், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு (UDID), பராமரிப்பு உதவி தொகை, வருவாய்த்துறையின் மூலம் மாதாந்திர உதவித்தொகை, உதவி உபகரணங்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்பநிலை மறுவாழ்வு பயிற்சி, முட நீக்கு அறுவை சிகிச்சை பரிந்துரை, வங்கிக்கடன் உதவி, பிற மறுவாழ்வு உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் நகல்கள் பாஸ்போர்ட் அளவில் ஆன புகைப்படம் 6, ஆகிய சான்றுகளுடன் தங்கள் பகுதிக்குட்பட்ட வட்டாரத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Jan 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு