/* */

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் விதைப்பண்ணை ஆய்வு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் விதைப்பண்ணை ஆய்வு

HIGHLIGHTS

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் விதைப்பண்ணை ஆய்வு
X

புதுக்கோட்டை வட்டார ராஜகுளத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணைகள் புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநரால் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் விதைப்பண்ணை ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்த கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை வட்டார கணபதிபுரம், கந்தர்வகோட்டை வட்டார வீரடிபட்டி கிராமங்களிலும் மற்றும் புதுக்கோட்டை வட்டார ராஜகுளத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணைகள் புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநரால் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை வட்டாரத்தில் ராஜகுளத்தூர் மற்றும் கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வீரடிபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கோ 51 ரக நெல் விதைப்பண்ணை மற்றும் விஆர்ஐ 8 நிலக்கடலை விதைப்பண்ணைகள் பார்வையிடப்பட்டது. கோ 51 நெல் வகையானது ஆர் ஆர் 272-1745 மற்றும் ஏடிடீ போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும். 105 -110 நாட்கள் வயதுடையது. இந்த நெல் மிதமான சன்ன ரக நெல், ஒரு ஏக்கருக்கு சுமார் இரண்டிலிருந்து இரண்டரை டன் மகசூல் தர வல்லது. புகையான், பச்சை தத்துப்பூச்சி மற்றும் குலைநோய்களுக்கு மிதமான எதிப்புத்திறன் கொண்டது.

நடுத்தர உயரம் மற்றும் சாயாத ரகமாகும். மேலும் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் வாயிலாக விதைப்பண்ணைகள் பதிவு செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏற்ற ரகங்களான 150-160 நாட்கள் வயதுடைய சி ஆர் 1009, சி ஆர் 1009 மற்றும் 120-135 நாட்கள் வயதுடைய பிபிடி 5204, ஏடிடீ 39 ஆகிய ரகங்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு விதை உற்பத்தி செய்யப்பட்டது. எனவே சான்று பெற்ற விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆய்வின் போது, புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை வட்டார உதவி விதை அலுவலர்கள் உடன் இருந்தனர். நல் விளைச்சலுக்கு வித்தே ஆதாரம், எனவே நல் விதை உற்பத்தி செய்து தாங்கள் பயன் அடைவதோடு மற்ற விவசாயிகளும் பயன் அடைய விதைப்பண்ணை அமைக்கலாம் நல்ல லாபம் பெறுவோம் என விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ரா.ஜெகதீஸ்வரி.

Updated On: 14 July 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு