/* */

மதவெறியைத் தூண்டும் விதத்தில் பேசினால் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்

தமிழகத்தில் மதவெறியைத் தூண்டும் விதத்தில் யார் பேசினாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்

HIGHLIGHTS

மதவெறியைத் தூண்டும் விதத்தில் பேசினால் இரும்புக்கரம் கொண்டு  அடக்க வேண்டும்
X

புதுக்கோட்டை பெரியார் நகரில் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி

புதுக்கோட்டை பெரியார் நகரில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி, இந்திய அளவில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்பு சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள் நீதிபதிகள் பத்திரிக்கையாளர்கள் போன்றவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய நடவடிக்கைகள் நாட்டினுடைய ஜனநாயகத்தை சீரழிக்கும்.

எனவே செல் ன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் முழு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருவதை நாங்களும் வரவேற்கின்றோம்.

டெல்டா மாவட்டங்களை வறண்ட மாவட்டம் ஆக மாற்றும் விதத்தில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக பாஜக அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் அரசியல் லாபத்திற்காக இரட்டை வேடம் போடுகிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் பதவியேற்ற இரண்டு மாதத்திற்குள்ளேயே முதல்வர் ஸ்டாலின் மிகச் சிறப்பாக பணியாற்றி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். அவருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேபோல் தமிழக அரசு சார்பில் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை நியமிக்கும் போது மிகச் சிறப்பாக ஆலோசனைகளை நடத்தி அரசு அதிகாரிகளை நியமித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் மதங்கள் குறித்து வன்முறையை தூண்டும் விதத்தில் யார் பேசினாலும் அவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.


Updated On: 25 July 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்