/* */

தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளிககளில் சேர்நதுள்ளதாக டிஇஓ விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை
X

புதுக்கோட்டை மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி 

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்க,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 1966 அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள்,சுயநிதிப் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இருப்பினும் கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும், ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் புதியதாக மாணவ ர்சேர்க்கை நடத்த்தப்பட்டு விலையில்லா பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளித்து வருவதால் தனியார் பள்ளிகளில் படித்த தங்களுடைய குழந்தைகளை பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளியை நோக்கி நாடி வந்துள்ளனர். இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.


Updated On: 15 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  5. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  7. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  8. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  9. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  10. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி