/* */

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

புதுக்கோட்டை ரயில் நிலையத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
X

திருச்சியிலிரந்து காரைக்குடி வரை அமைக்கப்பட்டுள்ள மின் பாதையை புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்தார்

திருச்சி காரைக்குடி இடையே நடந்து வரும் மின்சார ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

திருச்சி காரைக்குடி வழித்தடத்தில் 89 கிலோ மீட்டருக்கு மின்சார ரயில் பாதை மாற்றும் பணி 90 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஒரு வருட காலமாக பணிகள் நடைபெற்று வந்தது. இந்த வழித்தடத்தில் மின் பாதை அமைக்கும் பணிகள்முடிவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.திருச்சியிலிருந்து காலையில் புறப்பட்ட அவர் குமாரமங்கலம் கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்தார்

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பல்வேறு பணிகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார் அவருடன் வந்த ரயில்வே அதிகாரிகள் மின் பாதை அமைக்க பணி எவ்வாறு நடைபெற்றுள்ளது. அது முறையாக நடைபெற்று உள்ளதா என்பது குறித்து பார்வையிட்டு ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு விளக்கிக்கூறினர்.

பின்னர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சி காரைக்குடி இடையே மின் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது இதனை தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளேன். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் எந்தவிதமான குறைகளும் கண்டறியப்படவில்லை பணிகள் நன்றாக நடந்துள்ளது.இன்று மாலை சோதனை ஓட்டம் என்பது நடைபெறும் அதன் பிறகு அறிக்கை சமர்ப்பிக்கபடும்அந்த பின்னர் திருச்சி காரைக்குடி வரை அமைக்கப்பட்டுள்ள மின் பாதையில் ரயில்கள் இயங்க தொடங்கும்.

தெற்கு ரயில்வே எந்தெந்த பகுதிகளில் மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறதோ அந்த பணிகள் முடிவடைந்த பிறகு என்னிடம் கூறுவார்கள் நான் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிப்பேன்.அதன்பிறகு பாதுகாப்பு தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பிறகு மின் பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்றார் அவர். இந்த ஆய்வில் முதன்மை மின்சார பொறியாளர் ராஜமுருகன் மின்மயமாக்கல் திட்ட இயக்குனர் டிகே மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் உள்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Updated On: 17 Feb 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்