/* */

புதுக்கோட்டை பிரஹதாம்பாள் கோயில் ஆடிப்பூர விழா: தேர் கவிழ்ந்து விபத்தில் 5 பேர் காயம்

இக்கோயிலில் சித்திரை திருவிழா, ஆனி திருவிழா, ஆடிப்பூரம் மற்றும் சித்ரா பௌர்ணமி கிரிவலமும் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளாகும்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை பிரஹதாம்பாள் கோயில் ஆடிப்பூர விழா: தேர் கவிழ்ந்து விபத்தில் 5 பேர் காயம்
X

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து நடந்த இடத்தை  பார்வையிட்ட ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருக்கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தில்தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்

திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும். ஏழாம் நூற்றாண்டு (கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள். குடவரைக் கோயில்கள் என்பவை, செயற்கையான கட்டுமா னங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை அப்ப டியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை. திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச்சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக் கிறது.

இக்கோயிலில் சித்திரை திருவிழா, ஆனி திருவிழா, ஆடிப்பூரம் மற்றும் சித்ரா பௌர்ணமி கிரிவலமும் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளாகும்.

இந்நிலையில், ஆடிப்பூரத்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9.30 மணியளவில் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக சுவாமி அம்பாள் உற்சவர்கள் வைக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த போது, எதிர்பாராத விதமாக முன் பக்கமாகக்கவிழ்ந்தது. இவ்விபத்தில் தேரில் அருகில் இருந்த ஏறத்தாழ 15 பக்தர்கள் சிக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் பொதுமக்கள் தேரின் அடியில் சிக்கியவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவசர கால ஊர்தி மூலம் அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுமார் 20 லட்சம் செலவில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்ன புதுப்பிக்கப்பட்டதாகும். கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஓடாமல் தேர் நிலையிலேயே நின்றிருந்தது. இத்தேரை வெள்ளோட்டம் பார்த்திருக்க வேண்டும். அதைச்செய்யாமல் தேரோட்டம் நடத்தியதும், தேரின் மேல் தளத்துக்கு ஏற்ப உற்சவர் சிலைகள் வைக்கும் பீடம் சரியான உயரத்தில் அமைக்காததும், அதற்காக பலகைகள் பலமில்லாமல் இருந்ததும் இந்த விபத்துக்கு காரணம் என பக்தர்கள் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Updated On: 31 July 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்