/* */

புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக பெறப்பட்டுள்ள விருப்ப மனுக்கள் தொடர்பாகவும், வார்டு வாரியாக களப்பணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது

HIGHLIGHTS

புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
X

 பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகராட்சி பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட துணைத்தலைவர் ஏவிசிசி கணேசன்

புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திலகர்திடல் எம்.எஸ். திருமண மகாலில் மாவட்ட தலைவர் ராம.சேதுபதி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட நகராட்சிகளில் மொத்தம் 69 வார்டுகளுக்கும், அன்னவாசல், அரிமளம், இலுப்பூர்,கீரனூர், கறம்பக்குடி,ஆலங்குடி, கீரமங்கலம், பொன்னமராவதி ஆகிய பேரூராட்சிகளின் 120 வார்டுகளுக்கும் நடைபெறவுள்ள தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக பெறப்பட்டுள்ள விருப்ப மனுக்கள் தொடர்பாகவும், வார்டு வாரியாக நடைபெற்றுள்ள களப்பணி நிலவரங்களை பரிசீலிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இதில், ராமேஸ்வரம் கோட்ட அமைப்புச் செயலாளர் பாண்டுரங்கன், மாவட்ட பார்வையாளர் பி.எம் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவரும், நகராட்சி தேர்தல் பொறுப்பாளருமான ஏவிசிசி. கணேசன், மாவட்ட பொதுச் செயலாளரும், பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளருமான சிவசாமி ஆகியோர் பெறப்பட்ட விருப்ப மனுக்கள் குறித்து ஆய்வுப் பட்டியல் வெளியிட்டு பேசினர்.

முன்னாள் மாவட்ட தலைவர் தாமரைச் செல்வம், மாவட்ட பொருளாளர் ஏ.சி.எஸ். மணிகண்டன் சிறப்புரையாற்றினர். முன்னதாக மாவட்ட பொதுச் செயலாளர் ரங்கசாமி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பாஜக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட பொதுச் செயலாளர் சிஆர் பாலு அனைவருக்கும் நன்றி கூறினார்.

Updated On: 26 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்