/* */

புதுக்கோட்டை நகர பகுதிகளில் பொதுமக்கள் 24 மணி நேரமும் குறைகள் தெரிவிக்க போன் எண் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. அதிரடி

புதுக்கோட்டை நகர மக்கள் 24 மணிேநரமும் புகார் தெரிவிக்க 2 அலுவலர்களை நியமித்து போன் எண்ணை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை நகர பகுதிகளில் பொதுமக்கள்  24 மணி நேரமும் குறைகள் தெரிவிக்க போன் எண்  புதுக்கோட்டை  எம்.எல்.ஏ. அதிரடி
X

புதுக்கோட்டை நகர பகுதிகளில் 24 மணி நேரமும் பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு அலுவலர்கள் மற்றும் செல்போன் எண்களை எம்.எல்.ஏ. முத்துராஜா வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருத்துவர் முத்துராஜா புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தினந்தோறும் காலை வேளைகளில் புதுக்கோட்டை நகர பகுதிகள் மற்றும் புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்வது. பொதுமக்களிடம் குறைகளை கேட்பது. உடனடியாக பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை நிவர்த்தி செய்து கொடுப்பது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, புதுக்கோட்டை நகர பகுதிகளில் எந்த குறைகள் இருந்தாலும் 24 மணிநேரமும் பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு தன்னுடைய சொந்த முயற்சியில இரண்டு அலுவலர்களை நியமித்து அவர்களுடைய தொலைபேசி எண்களையும் தற்போது வெளியிட்டுள்ளார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா.

புதுக்கோட்டையில் நகரப்பகுதிகளில் 24 மணி நேரம் பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு அலுவலர்கள் மற்றும் அவர்களுடைய செல்போன் எண்களை வெளியிட்டுள்ள எம்.எல்.ஏ. முத்துராஜா செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Updated On: 3 July 2021 3:12 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!