/* */

புதுக்கோட்டை மாவட்டம்: உள்ளாட்சிகாலிப்பதவியிடங்களுக்கு வரும் 9-ஆம் தேதி தேர்தல்

தற்செயல் தேர்தலுக்கான வேட்பு நேற்று தொடங்கியது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும் 22 -ஆம் தேதி கடைசி நாளாகும்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம்: உள்ளாட்சிகாலிப்பதவியிடங்களுக்கு வரும் 9-ஆம் தேதி தேர்தல்
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.06.2021 வரை காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் எதிர்வரும் 9 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கவிதா ராமு வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு எண்.9, திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு எண்.5, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கீழப்பனையூர், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாங்காடு, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் அரசமலை, கீழத்தானியம், மறவாமதுரை ஆகிய கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 12 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 41 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

தற்செயல் தேர்தலுக்கான வேட்பு நேற்று தொடங்கியுள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 22 ஆம் தேதியாகும். பெறப்படும் வேட்பு மனுக்கள் அனைத்தும் வரும் 23 -ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களின் பட்டியல் அன்றைய தினமே வெளியிடப்படும்.

வேட்பு மனுக்களை வரும் 25 -ஆம் தேதி அன்று பிற்பகல் 3 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். போட்டியுள்ள பதவியிடங்களுக்கு வரும் 9 ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள இந்த தற்செயல் தேர்தல்களுக்கு மொத்தம் 178 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன வாக்குப்பதிவு வரும் 9 -ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளான 9 -ஆம் தேதி அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

பதிவாகும் வாக்குகள் அனைத்தும் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் அடுத்த மாதம் 12.10.2021 -ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்த மாதம் 16.10.21ஆம் தேதி முன்பாக முடிவடையும். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளாட்சி தற்செயல் தேர்தல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 04322-221691 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். தேவைப்படும் தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Sep 2021 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  4. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  5. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  6. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  7. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  9. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  10. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை