/* */

புதுக்கோட்டையில் அரசு பள்ளிகளில் எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு

பள்ளி மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தியதுடன் பள்ளி வளாகத்தில் தேங்கிய நீரை வெளியேற்ற உத்தரவிட்டார்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் அரசு பள்ளிகளில்  எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு
X

புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியை ஆய்வு செய்த எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் எம்எல்ஏ முத்துராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்யாததால் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதனையடுத்து, இன்று புதுக்கோட்டை அடுத்த கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குள்பட்ட, மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியது. இது குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் முத்துராஜா அப்பகுதிக்கு சென்று பள்ளியை நேரில் பார்வையிட்டார். மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தினார். பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்வில், கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குமரவேல், ஆயிஷா ராணி, வேளாண்துறை அதிகாரி லூர்து ராயப்பன் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 11 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்