/* */

நெல் சாகுபடியில் சன்ன ரகங்களை அதிக அளவில் பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

Farmer Meeting Today-கிராமப் பஞ்சாயத்துகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணிகளும் தரிசு நில தொகுப்புகளை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நெல் சாகுபடியில் சன்ன ரகங்களை அதிக அளவில் பயிரிட  விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
X

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை கேட்பு முகாமில் பங்கேற்ற விவசாயிகள்

Farmer Meeting Today-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் இன்று (28.10.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில்; மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 783.30 மி.மீ. ஆகும். 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 565.70 மி.மீ. க்கு பதிலாக 684.96 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது. 119.26 மி.மீ கூடுதலாக பதிவாகியுள்ளது.

பயிர் சாகுபடியை பொருத்தவரை 2022-2023 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முடிய நெல் 24126 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1418 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 805 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 5549 எக்டர் பரப்பிலும், கரும்பு 1961 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 43 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12340 எக்டர் பரப்பள விலும் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

பயிர்ச் சேதத்தை பொருத்தவரை டிசம்பர் 30 முதல் ஜனவரி 02 வரை பெய்த கனமழையால் பாதிப்படைந்த 3911 எக்டரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத் தொகை ரூபாய் 5 கோடியே 27 இலட்சத்து 97 ஆயிரம் மட்டும், 7582 எண்ணிக்கையிலான விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இடுபொருட்கள் இருப்பை பொருத்தவரை புதுகோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண் விரிவாக்க மையங்களில் 168.72 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 56.311 மெ.டன் பயறு விதைகளும், 32.078 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.665 மெ.டன் சிறுதானிய விதைகளும், 3.920 மெ.டன் எள் விதைகளும், 0.680 மெ.டன் பசுந்தாள் உரவிதைகளும் இருப்பில் உள்ளன.

விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் நெல் சாகுபடியில் சன்ன ரகங்களை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சம்பா பருவத்திற்கும் உகந்த ரகங்களான ஆடுதுறை 37, என்எல்ஆர் 34449, ஆர்என்ஆர் 15048, கோ 50, கோ 53 ஆகியவற்றை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அக்டோபர்;-2022 மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 4900 மெ.டன்களுக்கு, இதுவரை 3598 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குத் தேவையான டி.ஏ.பி. உரம் விநியோகத் திட்ட இலக்கின்படி 850 மெ.டன்களுக்கு 347 மெ.டன் வரப்பெற்றுள்ளது. பொட்டாஷ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கான 710 மெ.டன்களுக்கு இதுவரை 278 மெ.டன் பெறப்பட்டுள்ளது. காம்ப்ளக்;ஸ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கான 3315 மெ.டன்களுக்கு இதுவரை 1720 மெ.டன் பெறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 3731 மெ.டன்னும், டிஏபி 1111 மெ.டன்னும், பொட்டாஷ் 1019 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 4012 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங் களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் 938 மெ.டன் யூரியா, 633 மெ.டன் டிஏபி, 368 மெ.டன் பொட்டாஷ், 1352 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத் துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.

2021-22ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 68 தரிசு நிலத் தொகுப்புகளைப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டு 36 தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில் 72 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கிராமப் பஞ்சாயத்துகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. தரிசு நில தொகுப்புகளை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்களான கரும்பு, மக்காச்சோளம், எண்ணெய்ப் பனை மற்றும் தென்னை மரங்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனமும், பயறுவகைப் பயிர்கள் மற்றும் நிலக்கடலைப் பயிர்களுக்குத் தெளிப்புநீர்ப் பாசனம் மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகளும் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1100 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 1380 பயனாளிக ளுக்கு 1594 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.3 கோடியே 50 இலட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வேளாண் இணை இயக்குநர் (பொ) சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Oct 2022 10:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்