/* */

புதுக்கோட்டையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக முன்னறிவிப்பின்றி சோதனை செய்வதற்கு காவல் துறை திட்டமிட்டுள்ளது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
X

புதுக்கோட்டையில் நடந்த போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் தொடங்கி வைத்து கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், கலால்துறையும் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணியை நடத்தினர்

பேரணியை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் என்சிசி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

பேரணி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நிறைவடைந்தது.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செய்தியாளரிடம் பேசியதாவது: மாவட்டத்தில் கள்ளச்சாராயம் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பிரசார இயக்கங்கள் மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைப்பதற்காகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்கு ஓரிரு நாளில் ஹெல்ப்லைன் நம்பர் அறிவிக்கப்பட உள்ளது.

சமீபகாலமாக இளைஞர்கள் கஞ்சா மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர் காவல்துறையும் கலால் துறையும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆங்காங்கே பிரசாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில் போதைப் பொருட்களின் பயன்பாடு என்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் ஆட்சியர்.

இதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசியது: மாவட்டத்தில் கஞ்சா அதிகளவு விற்பனை செய்யப்படுவதை காவல்துறை மறுக்கவில்லை .ஆனால் அதனை கட்டுப்படுத்துவதற்கும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கும் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்வதற்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் தோறும் கல்லூரிகள் தோறும் காவல்துறை பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைஞர்கள் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக முன்னறிவிப்பின்றி சோதனை செய்வதற்கு காவல் துறை திட்டமிட்டுள்ளது.காவல்துறை குற்ற வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக மீண்டும் குற்றப்பிரிவு தொடங்கப்பட உள்ளது என்றார் எஸ்பி நிஷாபார்த்திபன்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  2. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  4. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  5. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  9. வீடியோ
    சிறைத்துறை அறிக்கை தவறானது ஆதாரம் காட்டும் வழக்கறிஞர் !#fake #report...
  10. நாமக்கல்
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...