/* */

வாக்கு எண்ணும் மையத்திற்கு வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கலெக்டர் தகவல்

வாக்கு எண்ணும் மையத்திற்கு வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஷ்வரி தகவல் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர், விடுதியில் கோவிட் சிகிச்சைக்கென புதிதாக உருவாக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று விகிதம் 3.7 சதவீதத்தில் உள்ளது. மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கி உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்டத்தின் தற்பொழுது 1,529 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு;ள்ளது.

எனினும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத்துறையின் சார்பில் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது.

இதில் 4 தளங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், ஒரு தளம் மருத்துவர்கள் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கும் நபர்கள் தங்கும் வகையிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைகள் தேவைப்படும் பொழுது இந்த மையம் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதேபோன்று அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையமும் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றவுடன் மீண்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் பங்கு பெறும் முகவர்கள், வேட்பாளர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் வருகின்ற 24 ஆம் தேதி சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேவையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்கள். காவலர்களுக்கு ஆயுதப்படை மைதானத்திலும், அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகர்வர்களுக்கு சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்திலும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இவர்கள் அனைவருக்கும் 28, 29, 3௦ ஆகிய தேதிகளில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சம்மந்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா தடுப்பு வழிமுறைகளின் படி வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்குதல், வெப்பநிலையை பரிசோதித்தல் போன்றவற்றை மேற்கொண்டு, அதன் பிறகே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 22 April 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...