/* */

13 இடங்களில் ஆள்துளை கிணறு அமைக்கும் பணி: திமுக எம்பி அப்துல்லா தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சி 1 வது 2 வது வார்டுகளில் ஆள்துளை கிணறு அமைக்கும் பணியினை திமுக எம்பி அப்துல்லா தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

13  இடங்களில் ஆள்துளை கிணறு அமைக்கும் பணி:  திமுக எம்பி அப்துல்லா தொடக்கம்
X

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ஒன்றாவது மற்றும் இரண்டாவது வார்டுகளில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை துவக்கி வைத்த மாநிலங்களவை திமுக எம்பி எம்எம் அப்துல்லா

13 இடங்களில் ஆள்துளை கிணறு அமைக்கும் பணியை துவக்கி வைத்தார் மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் கடந்த பத்து வருடங்களாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

மேலும் வீடுகளில் குடி நீரை தவிர்த்து மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமம் அடைந்து வந்திருந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு பல்வேறு பணிகளை செய்து வந்தது. இந்த நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவை எம்பி ஆக தேர்வு செய்யப்பட்ட எம் எம் அப்துல்லா, புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள 42 வார்டுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை பெற்று அதற்கான நடவடிக்கைகளை அவருடைய எம்பி தொகுதி நிதியிலிருந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று ஒண்ணாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆள்துளை கிணறு அமைக்கும் பணியினை திமுக மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் திலகவதி செந்தில், நகராட்சி துணைத்தலைவர் லியாக்கத் அலி, நகரக் கழகச் செயலாளர் நைனா முகமது, மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மதியழகன், பழனிவேல் மற்றும் ஒப்பந்தகாரர் ராம்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 30 April 2022 12:46 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  2. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  3. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  4. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  5. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  6. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  7. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  9. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  10. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...