/* */

ஊதியம் வழங்காததைக் கண்டித்து உள்ளாட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பளம் வழங்காததைக் கண்டித்து சிஐடியு சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

ஊதியம் வழங்காததைக் கண்டித்து  உள்ளாட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

பல மாதங்களாகஊதியம் வழங்காததைக் கண்டித்து புதுக்கோட்டையில் உள்ளாட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கிராம ஊராட்சிகளில் வேலைசெய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர், தூய்மை காவலர், தூய்மைப் பணியாளர், டெங்கு கொசு புழு ஒழிப்புப் பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் க.முகமதலி ஜின்னா தலைமை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள்; ஏ.முத்தையா, ஆர்.சி.ரெங்கசாமி, என்.ராஜா உள்ளிட்டோர் பேசினர்.

கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர், தூய்மை காவலர், தூய்மைப் பணியாளர், டெங்கு கொசு புழு ஒழிப்புப் பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், அரசு அறிவித்தபடி 38 விழுக்காடு ஊதிய உயர்வுடன் அனைத்து ஊராட்சி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

Updated On: 23 May 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!