/* */

மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் தொடக்கம்

நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியர் மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் தொடக்கம்
X

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்த ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ்,ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கி, ரயில்வே போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு தொடங்கியது.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், வங்கி, ரயில்வே போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா (29.05.2023) துவக்கி வைத்தார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரால் ‘நான் முதல்வன் திட்டம்” தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கு தொழில் துறை சார்ந்த வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான தனிப்பிரிவு, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரால் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் , ரயில்வே பணியாளர் தேர்வாணையம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வெற்றி பெற உதவிடும் வகையில் பயிற்சி வழங்க இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணை யம் , இரயில்வே பணியாளர் தேர்வாணையம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டை சார்ந்த போட்டித் தேர்வர்கள் பெருமளவில் பங்குகொண்டு வெற்றிபெறும் நோக்கில் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு புதுக்கோட்டையில் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் 150 மாணவர்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் 100 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் போட்டித் தேர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது.இப்பயிற்சிக்கான பாட நூல்கள் மற்றும் கையேடுகள் கட்டண மில்லாமல் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பின் அங்க மாக 300 மணி நேர தனி வழிகாட்டல், 100-க்கும் மேற்பட்ட மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் ஒன்றிய அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற்று பணிநியமனம் பெறுமாறு வாழ்த்துகிறேன்.மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNUSRB, TNPSC -ஆல் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.இப்பயிற்சி வகுப்பிலும் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்பா.புவனேஸ்வரி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (தொ.வ) பெ.வேல்முருகன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொது) மோ.மணிகண்டன், உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சு.இராமர், வட்டாட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 30 May 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?