/* */

மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் மக்கள் விரோதமான உள்ள அம்சங்களைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழில் சங்கத்தினர்

ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் பட்ஜெட்டைக் கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாநில செயலாளர் எஸ்.தேவமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட நிர்வாகிகள் சி.அன்புமணவாளன், சி.மாரிக்கண்ணு, கே.ரெத்தினவேல் உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் வணிகம், கல்வி, சுகாதாரம், சிறு, குறு தொழில்களை பாதுகாக்காத, வேலை வாய்ப்பை உருவாக்காத, கார்பரேட் கொள்ளைக்கு வழி வகுக்கின்ற ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், அதானி நிறுவனத்தின் மோசடி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பட்ஜெட்டில் 100 நாள் வேலைக்கான நிதி குறைப்பு.. நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2023 -2024 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 100 நாள் வேலை திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி இதுவரை இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

6 ஆண்டுகளில் மிகவும் குறைவு.100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி இதுவரை இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப் பட்டு இருக்கிறது.அந்த வகையில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டும் ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சாலை பராமரிப்பு, நீர் நிலைகளை தூர்வாருதல், கிணறு தோண்டுதல், முட்புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்பட்டது.

நூறு நாள் நிச்சய வேலை ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் கிராம மக்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பணி வழங்கி ஊதியம் வழங்க வேண்டும் என்பதால் இதை நமது தமிழ்நாடு மக்கள் 100 நாள் வேலை திட்டம் என்று கூறி வருகிறார்கள். இதன் மூலம் கிராம பகுதிகளில் உள்ள ஏராளமான பெண்கள், முதியோர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்து இருக்கும் நிதி ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே. கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.89.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து இருந்த நிலையில் தற்போது சுமார் ரூ.29.4 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச்செயலைக்கண்டித்து சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Updated On: 23 Feb 2023 9:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  3. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  4. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  6. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  9. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  10. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு