/* */

பள்ளிகளில் காலை உணவுத்திட்டம்: உணவு தயாரிக்க சுயஉதவிக்குழுவினர் தேர்வு

இந்த சமையலர் பதவிக்கு தகுதியற்றவரை பரிந்துரைத்தாலோ, கையூட்டு பெற்றதாக தெரியவந்தாலோ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

HIGHLIGHTS

பள்ளிகளில் காலை உணவுத்திட்டம்: உணவு தயாரிக்க சுயஉதவிக்குழுவினர் தேர்வு
X

பைல் படம்

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 2023-24 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அரசு தொடக்கப்பள்ளி, நடுப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உப்பள்ளி மற்றும் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 11 முதல் 5 வரை பயிலும் மாணவ மாணவியருக்கு இத்திட்டத்தினை செயல்படுத்தும் வண்ணம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை காலை உணவுத் திட்டம் வழங்கும் பள்ளிகளில் உணவு தயார் செய்திட கீழ்க்கண்ட தகுதியின் அடிப் படையில் தேர்வு செய்ய வேண்டும்

கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு மற்றம் மேற்படிப்பு படித்தவராக இருக்க வேண்டும் மற்றும் உணவு தயாரிப்பதில் போதிய ஆர்வம் மற்றும் அறிவுடையவராக இருத்தல் அவசியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்திருக்கும் அதே குடியிருப்பு பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். மகனின் சுய உதவிக்குழுவின் உறுப்பினராக இருக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய குழுவில் தொடர்ந்து 3 வருடம் உறுப்பினராக இருக்க வேண்டும். தொடர்புடைய மகளிர் சுயஉதவி குழு PLF-யில் இணைந்திருக்க வேண்டும். தொடர்புடைய மகளிர் சுயஉதவிக்குழுவும் மற்றும் தேர்வு செய்யப்படும் உறுப்பினரும் NRLM Portal-லில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபா Android Phone / Smart Phone அவருடைய பெயரில் சொந்தமாக வைத்திருக்க வேண்டும்

காலை உணவு தயார் செய்யும் அதே பள்ளியில் தன்னுடைய மகனோ, மகளோ படிப்பவராக இருக்க வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதை PLF மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். தேர்வு செய்யப்படும். சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் CIF,VRF,RF மற்றும் நேரடி வங்கிக்கடன் ஆகியவற்றில் கடன் பெற்றதில் Defaulter (தவணை தவறிய கடன்) ஆக இருத்தல் கூடாது. தேர்வு செய்யப்படும் குழு போதிய நிதி வசதி (Corpus fund) உடையதாக இருத்தல் அவசியம். மேற்கண்ட தகுதிகள் இருப்பின் Breakfast Scheme Core Committee / Village Level Committee-யில் தீர்மானம் நிறைவேற்றி தேர்வு செய்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு ஊராட்சிக்கும் Breakfast Sheme Core Committee / Village Level: Committee-யினை ஊராட்சிகள், ஊராட்சி மன்றத்தலைவர், தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாக குழு தலைவர், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர் மற்றும் பேரூராட்சிகள், பேரூராட்சித் தலைவர், தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாக குழு தலைவர், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர், பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொண்டு அமைக்க வேண்டும்.

எனவே, முதலமைச்சரின் இலவச காலை உணவுத் திட்டத்தினை 2023-24 ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5 வரை மாணவியருக்கு காலை உணவு சமைப்பதற்கு மேற்கண்ட நிபந்தனைகளைப் பின்பற்றி தகுதி வாய்ந்த சுய உதவிக் குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த சமையலர் பதவி முற்றிலும் தற்காலிகமானது. தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களின் தாயாரே இந்த சமையலர் பதவிக்கு தகுதியானவர்கள். அம் மாணவர் 5- ஆம் வகுப்பு முடித்து 6- ஆம் வகுப்பிற்கு செல்லும் பட்சத்தில், அப்பள்ளியில் 1-5 வகுப்பில் பயிலும் வேறு மாணவரின் தாயார் 10- ஆம் வகுப்பு படித்த சுய உதவிக் குழு உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் இப்பதவியில் பணியில் சேர இயலும். இந்த சமையலர் பதவிக்கு தேர்வு செய்வது தொடர்பாக தகுதியற்றவரை பரிந்துரைத்தாலோ, எவரேனும் கையூட்டு பெற்றதாக தெரிய வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணிக்கு தேர்வு செய்வதற்கு எந்த ஒரு தலையீடும் கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 9 May 2023 6:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  4. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  5. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  6. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  9. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  10. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!