/* */

உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி செயல்படாத உர விற்பனை நிலையங்களுக்குத் தடை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

HIGHLIGHTS

உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி செயல்படாத உர விற்பனை நிலையங்களுக்குத் தடை
X

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உர விற்பனை நிலையங்கள் வேளாண்மை இயக்குநர் ஆணைப்படி, சிறப்பு பறக்கும் படை குழுவினரால் திடீர் ஆய்வு  

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உர விற்பனை நிலையங்கள் வேளாண்மை இயக்குநர் ஆணைப்படி, சிறப்பு பறக்கும் படை குழுவினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது என புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மா. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளால் சம்பா நெல் சாகுபடி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலைப் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் சம்பா நெல் நடவுப் பணிகளிலும், நெற்பயிருக்கு மேலுரம் இடுவதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே சாகுபடிக்குத் தேவையான உரங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் யூரியா - 3971 மெட்ரிக் டன்கள், டிஏபி - 1745 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் - 945 மெட்ரிக் டன்கள், காம்பளக்ஸ் - 5146 மெட்ரிக் டன்கள் உரம் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வேளாண்மை இயக்குநர் ஆணைப்படி, உர விற்பனை நிலையங்களில் சிறப்பு பறக்கும் படை குழுவினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில், உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ சரியாகப் பின்பற்றாத 2 சில்லரை உர விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக விற்பனைத் தடை விதித்து உத்தரவிடப்பட்டு, முறையாகப் பின்பற்றப்படாமைக்கான விளக்கம் கோரப்பட்டுள்ளது. சில்லறை உர விற்பனையாளர்கள் உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும்.

உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக் கூடாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் இது குறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையும் அல்லது மாவட்ட உரக் கண்காணிப்பு மையத்தை 04322-221666 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், மொத்த உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் உரிய அனுமதி பெற்ற இடங்களிலும் உரிய அனுமதி பெற்ற நிறுவனங்களிலிருந்து மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும். மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்களுக்கு உரம் தவிர இதர இடுபொருட்களை தேவையில்லாமல் இணைத்து விற்கக் கூடாது. மேலும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களிலிருந்து உரம் கொள்முதல் செய்வதும் கூடாது. இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர கட்டுப்பாட்டு ஆணையின்படி, உரிமம் இரத்து செய்யப்படும் என புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் மா. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Nov 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை