/* */

விளையாட்டு செய்திகளுக்காக மேம்பாட்டு ஆணைய செயலி: மே 12 -க்குள் பதிவு செய்யலாம்

விளையாட்டு செய்திகளுக்கான மேம்பாட்டு ஆணைய செயலியில் விளையாட்டு வீரர்கள் மே 12 -க்குள் பதிவு செய்து கொள்ளலாம்

HIGHLIGHTS

விளையாட்டு செய்திகளுக்காக மேம்பாட்டு ஆணைய செயலி: மே 12 -க்குள் பதிவு செய்யலாம்
X

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியான TN Sports (Adukalam App) ஆடுகளம் செயலியில் 12.05.2022-க்குள் பதிவு செய்துகொள்ளலாம்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு விளையாட்டு ஆடுகளம் செயலி TN Sports (Adukalam App) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் இனிவருங்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியான TN Sports (Adukalam App) ஆடுகளம் பதிவேற்றம் செய்து பயன்படுத்திட வேண்டும். வீரர், வீராங்க னைகள் தங்களது இ-மெயில் முகவரி, மொபைல் எண் பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு இலவசமாக பதிவுசெய்து கொள்ளலாம்.

விளையாட்டுதுறை சார்ந்த அறிவிப்புகள், விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவதற்கான முன்பதிவு செய்தல், வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே DIGI LOCKER மூலம் வழங்கப்படவுள்ளது. விளையாட்டுத் துறையின் பயன்களை பெறுவதற்கு இச்செயலி மிகவும் இன்றியமையாததாகும்.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் TN Sports (Adukalam App) ஆடுகளம் எனும் செயலியை 12.05.2022 -க்குள் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

Updated On: 10 May 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  9. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!