/* */

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்டு அன்னாசி பழ அலங்காரத்தில் அரியநாச்சியம்மன்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோயில்களுக்குச்சென்று தரிசனம் செய்தனர்

HIGHLIGHTS

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்டு அன்னாசி பழ அலங்காரத்தில் அரியநாச்சியம்மன்
X

 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்டு அன்னாசிப்பழ அலங்காரத்தில் அரியநாச்சி அம்மன்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்டு அன்னாசிப்பழ அலங்காரத்தில் அரியநாச்சி அம்மன் காட்சியளித்தார்.

தமிழகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடியற்காலையிலேயே புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பால் சந்தனம், நெய், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு காலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் சாந்தாரம்மன் கோயில் மற்றும் அரியநாச்சி அம்மன் கோயில்களிலும் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்டு மற்றும் அன்னாசிப்பழங்களால் அரியநாச்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. இதனை நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடினர்.

Updated On: 1 Jan 2022 4:23 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு