/* */

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை

இவர் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு துறைகளில் பணியாளர்கள் நியமனம் பணிமாறுதல்களை செய்து வந்தார்

HIGHLIGHTS

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளரிடம்  லஞ்ச ஒழிப்பு போலீஸார்  விசாரணை
X

புதுக்கோட்டை அருகே  இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளர் அன்பானந்ததிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்து வருபவர் அன்பானந்தம்.இவர் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு துறைகளில் பணியாளர்கள் நியமனம், பணிமாறுதல் மற்றும் கட்சித் தலைவர்கள் வருகை அரசியல் நிகழ்வுகளை முன்னின்று ஏற்பாடு செய்வது போன்ற முக்கிய பணிகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 29 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தற்போது விஜயபாஸ்கரின் உறவினர்கள் ஆதரவாளர்கள் உதவியாளர்களாக இருந்து வருபவர்களிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில், புதுக்கோட்டையில் முக்கிய உதவியாளராக செயல்பட்டு வரும் அன்பானந்தத்தை தற்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், புரட்சிக்கவி பெயரில் உள்ள கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் உதவியாளர்கள் நெருங்கியவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் கலக்கத்தில் உள்ளனர்.

Updated On: 18 Oct 2021 2:04 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்