/* */

டிஏபி-க்கு பதிலாக மணிச்சத்து அதிகமான எம்ஏபி உரத்தை பயன்படுத்த வேளாண்துறை யோசனை

உரங்களை அதிக விலை விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

HIGHLIGHTS

டிஏபி-க்கு பதிலாக  மணிச்சத்து அதிகமான எம்ஏபி உரத்தை பயன்படுத்த வேளாண்துறை யோசனை
X

பைல் படம்

டிஏபி-க்கு பதிலாக மணிச்சத்து அதிகமான எம்ஏபி உரத்தை பயன்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள் உரங்களை அதிக விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, தென்னை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 3931 டன்கள்;, டி.ஏ.பி 1239 டன்கள் , பொட்டாஷ் 1041 டன்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் 4837 டன்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மொத்த உர விற்பனையாளர்கள் கவனத்திற்கு: வெளி மாவட்டங்களுக்கு உரங்களை ஏற்றுமதி செய்யக்கூடாது.உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யக்கூடாது. உரங்களை அனுப்பும் பொழுது உரிய பட்டியல்ககள் மற்றும் ஆவணத்துடன்; உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும். சில்லரை உர விற்பனையாளர்கள் கவனத்திற்கு: விவசாயிகளின் தேவைக்கு அதிகமாக உரம் வழங்கக் கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக் கூடாது. குறிப்பிட்ட விவசாயியின் பெயரில் அதிகபடியாக உர விற்பனை செய்யக்கூடாது.

உர விற்பனையாளர்கள் கவனத்திற்கு: உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைக்கக்கூடாது. உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களின் உரங்களை கொள்முதல் செய்யக்கூடாது. விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக் கூடாது. உரங்களுடன் விவசாயிகளுக்கு தேவையில்லாத இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்;யக்கூடாது. உரம் இருப்பு மற்றும் விலை விவரப் பலகை பார்வையில் படும்படி வைக்கப்பட வேண்டும்.

உரிய பதிவேட்டில் உரம் இருப்பு பராமரிக்கப்பட வேண்டும். விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே உரம் விற்பனை மேற்கொள்ள வேண்டும். விற்பனை முனையக்கருவி (பிஓஎஸ்) யில் உள்ள இருப்பும், உண்மை இருப்பும் மற்றும் புத்தக இருப்பும் சரியாக இருக்க வேண்டும்.ஆகையால் திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி உர விற்பனை உரிமம் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

விவசாயிகளின் கவனத்திற்கு: விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் வாங்க வேண்டும். உரம் வாங்கும் பொழுது உரிய பட்டியல் கேட்டு வாங்கவும். உரங்களுடன் வேறு இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்தாலோ அல்லது உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் புகார் செய்யலாம்.

மாவட்ட உர கண்காணிப்பு மையத்தினை 04322 221666 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். டிஏபி-க்கு பதிலாக எம்ஏபி எனப்படும் மோனோ அமோனியம் பாஸ்பேட் எனப்படும் 11 சதம் தழைச்சத்து 52 சதம் மணிச்சத்துடன் தற்பொழுது விற்பனை செய்யப்படும் எம்ஏபி உரத்தினை விவசாயிகள் வாங்கி பயன்படுத்திடவும் கேட்டுக் கொள்ளப் படுகிறது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 ஆகியவற்றை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 30 Dec 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்