/* */

புதுக்கோட்டையில் களையிழந்த ஆடிப்பெருக்கு திருவிழா

கொரோனா பரவல் காரணமாக கோயில்கள் வழிபாடுகளுக்கு தமிழக அரசு திடீரென தடை விதித்தததால், புதுக்கோட்டையில் ஆடிப்பெருக்கு களையிழந்தது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் களையிழந்த  ஆடிப்பெருக்கு திருவிழா
X

புதுக்கோட்டை சாந்தா ராமன் கோவிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு குளத்தில் பூஜை செய்து வழிபடும் பெண்கள்

ஒவ்வொரு வருடமும் ஆடி18 முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில் குளக்கரைகளில் புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் காலையிலேயே கோவில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டும், கோவில் அருகிலுள்ள குளக்கரை படிக்கட்டில் சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்ட பின்பு குளத்தில் பூஜை செய்த பொருட்களை தண்ணீரில் விட்டு இறைவனை வழிபடுவது வழக்கம்.

அதேபோல் புதுமண தம்பதிகள் தங்களுடைய மாங்கல்யத்தை மாற்றி பெரியவர்கள் முன்னிலையில் புது மாங்கல்யத்தை அணிவித்துக் கொள்வதும் ஆடி பதினெட்டில் சிறப்பு அம்சமாகும். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கோயில்கள் வழிபாடுகளுக்கு தமிழக அரசு திடீரென தடை விதித்தது.

இதனால் இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள சாந்தாரம்மன் கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன், கோவில் என பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் வராமலும் ஒரு சிலர் சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் வாசலிலிருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதேபோல் சாந்தாரம்மன் கோவில் பல்லவன் குளக்கரையில் கோவில் குளக்கரையில் வழிபாட்டுக்கு தடை விதித்திருந்தாலும் பொதுமக்கள் ஒருசிலர் ஆடிப்பெருக்கை கோவில் குளக்கரையில் செய்து வழிபட்டனர்.

Updated On: 3 Aug 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  5. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  6. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  8. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  10. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...