/* */

இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர்கள் 2 பேர் கைது: தப்பிய மீனவரை தேடுகின்றனர்

கோட்டைப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகை தங்களது ரோந்து கப்பல் மூலம் மோதி சேதப்படுத்தி 2 பேரை கைது செய்தனர்

HIGHLIGHTS

இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர்கள் 2 பேர் கைது: தப்பிய மீனவரை தேடுகின்றனர்
X

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள கோட்டைப்பட்டினம் மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கடலில் குதித்த மற்றொரு மீனவரை தீவரமாகத் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய எல்லை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில், அங்கே வந்த இலங்கை கடற்ப்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சுரேஷ் (39) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை (எண் TN08 MM 0201) தங்களது ரோந்து கப்பல் மூலம் மோதி உடைத்துள்ளனர். இதில் விசைப்படகு சேதமடைந்து கடலில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது.

படகு கடலில் முழ்கியதை அடுத்து அதில் சென்ற மூன்று மீனவர்களில் ராஜ்கிரண் (30) என்ற மீனவர் கடலில் மாயமாகியுள்ளார். மேலும் கடலில் தத்தளித்த மீனவர்கள் சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய மீனர்களை இலங்கை கடற்ப்படையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் விசைப்படகை இலங்கை கடற்படையினர் தாக்கி மூழ்கடித்ததுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதும் மீனவர் ஒருவர் மாயமான சம்பவம் மீனவ கிராமத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


Updated On: 19 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...