Begin typing your search above and press return to search.
தமிழ்நாடு சத்துணவு- அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச பென்சன் ரூ. 7850 வழங்கக்கோரி சத்துணவு- அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS

பெரம்பலூர், பாலக்கரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலின் முன்பு, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், குறைந்த பட்ச பென்சன் தொகை ரூ 7850 வழங்க வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், நிர்வாகிகள், சாந்தப்பன், சிவகலை, கனகரத்தினம், ராஜேந்திரன், ஜெகதீசன் உள்பட 50 -க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் ஒய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.