பெரம்பலூரில் போக்சோவில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெரம்பலூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரம்பலூரில் போக்சோவில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

பெரம்பலூர் மாவட்டம்திருப்பெயர் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (28), இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இவர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியயர் என கருதப்பட்டதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி மாவட்ட ஆட்சியருக்குகு பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா சக்திவேலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவின் நகல் சிறையில் உள்ள சக்திவேலிடம் வழங்கப்பட்டது.

சக்திவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா மற்றும் காவலர் செல்வராணி ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரிதும் பாராட்டினார்.

Updated On: 14 Oct 2021 4:32 AM GMT

Related News