/* */

பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கி

பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கியை கலெக்டர் ஆய்வுய செய்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கி
X
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கியை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிக்குளம் ஊராட்சியில் வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிட்டங்கியை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றும் விதத்தில் இம்மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.. சின்ன வெங்காயத்திலிருந்து மதிப்புக் கூட்டுதல் முறையில் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், உற்பத்தி செய்த மதிப்புக் கூட்டுப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் இம்மையத்தில் வெங்காய மதிப்பு கூடுதல் இயந்திர அலகு, 50 மெட்ரிக் டன் அளவு குளிர்சாதன சேமிப்பு கிடங்கு, 50 மெட்ரிக் டன் அளவில் சேமிக்க கூடிய சேமிப்பு கிடங்கு, விவசாய உற்பத்தி பொருட்களை ஏலம் விடுவதற்கு ஏதுவான வளாகம், சூரிய உலர்த்தி, சிற்றுண்டி மையம், 10 கடைகள் உள்ளிட்டவைகள் அடங்கிய ஒரு வணிக வளாகமாக உள்ளது.

இந்த வணிக வளாகத்தினை தங்களது வெங்காய உற்பத்தி பொருட்களை சேமித்து வைத்து பயனடையவும், வளாகத்தினை முறையாக பேணி பராமரித்திட வழிவகை செய்யவும், மேலும் விவசாயிகள் தங்களது வெங்காய உற்பத்தி பொருட்களை சேமித்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றிக் கொள்ளவும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) பாத்திமா, துணை இயக்குநர்(வேளாண் விற்பனை) சிங்காரம் வேளாண்மை அலுவலர் நாகராஜன், உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்னவேணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Sep 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?