/* */

கூடலூரில் வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் சிக்கியது

நீலகிரி மாவட்டம் கூடலூரில், வனவிலங்குகளை வேட்டையாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கூடலூரில் வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் சிக்கியது
X

நீலகிரி மாவட்ட பந்தலூர் அருகே சோலாடி பகுதிக்கு அருகில், கேரள மாநிலம் மேப்பாடி பகுதியில், ஒரு கும்பல் தொடர்ச்சியாக வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக வனச்சரகருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்,வனச்சரகர் தலைமையில் குழுவினர், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதில், வலைவிரித்து கடமானை சிக்க வைத்து வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த வேட்டையில் ஈடுபட்டராஜன் (48), மோகனன் (38), சிவகுமார் (40), கில்பர்ட் (40)ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், இருசக்கர வாகனம், இறைச்சி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு நக்சல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 17 Sep 2021 3:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  2. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  5. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  8. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  9. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  10. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...