/* */

பழுதான போர்வெல் கிணற்றை சீரமைக்க கோரி கம்யூ., கட்சியினர் நூதன போராட்டம்

திருச்செங்கோடு அருகே பழுதான போர்வெல் கிணற்றுக்கு பூஜை செய்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பழுதான போர்வெல் கிணற்றை சீரமைக்க கோரி கம்யூ., கட்சியினர் நூதன போராட்டம்
X

திருச்செங்கோடு அருகே பழுதான போர்வெல் கிணறுக்கு பூஜை நடத்தி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு அருகே பழுதான போர்வெல் கிணற்றுக்கு பூஜை செய்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு தாலுக்கா, எலச்சிபாளையம் அருகே உள்ள கொண்னையார் கிராமம், ஆயித்தாகுட்டை பகுதியில், ரோடு ஓரம் போர்வெல் கிணறு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த போர்வெல் பழுதடைந்துள்ளது. கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட, இந்த போர்வெல் வறட்சிக் காலத்திலும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் நிலையில் செயல்பட்டு வந்தது. இந்த போர்வெல் கிணறு வறட்சி ஏற்படும் காலத்தில்கூட இயங்கி வந்தது.

மேலும் கரியாம்பாளையம். வட்டூர் பள்ளிபாளையம். எலச்சிபாளையம், ஆலங்காடு. வண்டிநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து டூ வீலர்களில் வந்து ஏராளமானவர்கள் இங்கு குடிநீர் எடுத்துச் சென்றனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த போர்வெல் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாயத்து தலைவர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் போர்வெல் கிணறை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் குடீநிர் தேவைக்காக, மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதைக்கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், நூதனமான முறையில் போர்வெல் கிணறுக்கு பூஜை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் மாரிமுத்து தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் பேராட்டத்தை துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரமேஷ், கிட்டுசாமி. ராஜீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  3. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  5. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  6. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  7. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  8. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  10. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்