/* */

சேந்தமங்கலத்தில் கோயில் பூசாரிகளுக்கு 3 நாட்கள் ஆகம பூஜை பயிற்சி

ஆகம பயிற்சியில், 15 மாவட்டங்களைச் சேர்ந்த 95 கோயில் பூசாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்

HIGHLIGHTS

சேந்தமங்கலத்தில் கோயில் பூசாரிகளுக்கு  3 நாட்கள் ஆகம பூஜை பயிற்சி
X

சேந்தமங்கலத்தில் நடைபெற்ற கோயில் பூசாரிகளுக்கான ஆகம பூஜை பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மாவட் திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் கோயில் பூசாரிகளுக்கு 3 நாட்கள் ஆகம பூஜை பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் தமிழ்நாடு கிராமக் கோயில் பூசாரிகள் சமூக நலப்பேரவையின் சார்பில் இரண்டாம் ஆண்டு ஆகம பூஜை பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது. நிறைவு விழாவில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில், பேரவையின் நிர்வாக அறங்காவலர் துரை ரமேஷ், ஆசிரியர் கோவிந்தராஜ சாஸ்திரிகள், கிராமக் கோயில் பூசாரிகள் சமூக நலப்பேரவை பயிற்சியாளர் ஸ்ரீ திருமால், அனுகிரஹக மந்த்ராலய நிறுவனர் தங்கராசு, தருமபுரி சதா சிவானந்த சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் பேசினார்கள்.ஆகம பயிற்சியில், 15 மாவட்டங்களைச் சேர்ந்த 95 கோயில் பூசாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதனுடன், மந்திர தீட்சை 71 பேரும், பூணூல் தீட்சை 39 பேரும், சமய தீட்சை 45 பேரும் பெற்றனர். நிழ்ச்சியில், சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார், ராசிபுரம் ஒன்றியச் செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 31 Aug 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  8. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  9. வீடியோ
    🔴LIVE : வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு மத்திய அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!