/* */

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 1,000 வரை விலை உயந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
X
பைல் படம்.

பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலைவேப்பங்கொட்டை, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவுத் தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் மரவள்ளிக் கிழங்குகளை கொள்முதல் செய்கின்றனர். மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த வாரம் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ. 1,000 வரை விலை உயர்ந்து ரூ. 7ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. மரவள்ளிக் கிழங்கு வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மரவள்ளிக் கிழங்கு விலை உயர்வால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 3 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்