/* */

ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் இளைஞர் கைது: போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில், குற்றவாளியை விரைந்து கைது செய்த போலீசாரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.

HIGHLIGHTS

ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் இளைஞர் கைது: போலீசாருக்கு எஸ்பி பாராட்டு
X

நவீன்.

நாமக்கல் ஜெய்நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (48), ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 2 நாட்கள் முன்பு, நாமக்கல் திருச்சி ரோட்டில், காருக்குள் அவரது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி உத்திரவின்பேரில் கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இச்சம்பவத்தில் சம்மந்தப்பட்ட ஜெய் நகரைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்து வரும் நவீன் (22) என்பவரை கைது செய்தனர். இந்த கொலை சம்மபவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி கூறுகையில், கொலை சம்பவத்தில் குற்றவாளியை பிடிக்க முக்கிய ஆதாரமாக அங்கிருந்த சிசிடிவி பதிவுகள் பயன்பட்டது. இதுபோல் பொதுமமக்கள் தங்களது குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

அப்படியே நடந்தாலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உதவியாக இருக்கும் என்றார். முன்னதாக கொலை சம்பவம் நடந்து 2 நாட்களில் குற்றவாளியை கைது செய்த நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் போலீசாருக்கு எஸ்.பி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Updated On: 21 July 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!