/* */

நாமக்கல்லில் நாளை சர்வதேச யோகா தின விழா

நாமக்கல்லில் நாளை சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்படவுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் நாளை சர்வதேச யோகா தின விழா
X

சர்வதேச யோகா தின மாதிரி படம் 

நாமக்கல், ஜூன் 21-

நாமக்கல்லில் நாளை சர்வதேச யோகா தின விழா நடைபெறுகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளின்படி, உலக நாடுகள் அனைத்திலும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதே யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாமக்கல் உலக சமுதாய சேவா சங்கம், மனவளக்கலைமன்றம் சார்பில் சர்வதேச யோகா தின விழா நாளை 21 ம் தேதி மாலை 4.30 மணிக்கு நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். செங்கல்பட்டு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் டாக்டர் மணி முன்னிலை வகிக்கிறார்.


ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் உதயக்குமார் யோகா பயிற்சியை துவக்கி வைக்கிறார். நாமக்கல் மனவளக்கலைமன்ற தலைவர் ராமு வரவேற்கிறார். உலக சமுதாய சங்க விரிவாக்க இயக்குனர் உழவன் தங்கவேலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகிறார். நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன், நாமக்கல் மனவளக்கலைமன்ற துணைத்தலைவர் ரவீந்திரன், செயலாளர் சுப்ரமணியம், பொருளாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பேராசிரியர்கள், உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு வகையான யோகா பயிற்சிகள் செய்து காண்பித்து விழிப்புணர்வு அளிக்க உள்ளனர்.

Updated On: 20 Jun 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...