/* */

மாவட்ட அளவில் வன உயிரின வாரவிழா போட்டிகள் : 300 மாணவர்கள் பங்கேற்பு

பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைபபள்ளியில் நடைபெற்றது

HIGHLIGHTS

மாவட்ட அளவில் வன உயிரின வாரவிழா  போட்டிகள் : 300 மாணவர்கள் பங்கேற்பு
X

நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான, வன உயிரின வார விழா ஓவியப்போட்டியில் திரளான மாணவ மணவிகள் கலந்துகொண்டனர்.

வன உயிரின வார விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மணவிகள் கலந்துகொண்டனர்.

வனத்துறை சார்பில், ஆண்டு தோறும், அக்டோபர் முதல் வாரத்தில், வன உயிரின வாரவிழா கொண்டாடப்படுகிறது. இதையெட்டி, நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, தமிழ் மற்றும் ஆங்கில வழி ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகிறது.

முதற்கட்டமாக, பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைபபள்ளியில் நடைபெற்றது. நாமக்கல் கோட்ட வனச்சரகர் பெருமாள் தலைமை வகித்தார். உதவி வனபாதுகாவர் அல்லிமுத்து போட்டிகளை துவக்கி வைத்தார். வனச்சரகர்கள் ரவிச்சந்திரன், முருகவேல், திருச்செந்தூரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ் மற்றும் ஆங்கில வழி ஓவியப்போட்டியில் வன உயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு மற்றும் வன உயிரினங்களை பாதுகாத்தலின் அவசியம் என்ற தலைப்பில் போட்டி நடந்தது. அதேபோல், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில், மனித – வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு மற்றும் ஆங்கில வழியிலும் போட்டி நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். மேலும், முதல் இடம் பிடிப்பவர்கள், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 25 Sep 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’