/* */

ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

நாமக்கல்லில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
X

நாமக்கல் மாவட்டம் ரெட்டிப்பட்டி பஞ்சாயத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு திரளான இளைஞர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிப்பட்டி ஊராட்சி சாலப்பாளையம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக கிராம மக்கள் முடிவு செய்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்கனவே பல முறை அனுமதி கேட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், உடனடியாக ஜல்லிக்கட்டு போட்ட நடத்த அனுமதி வழங்கக் கோரியும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பஞ்சாயத்து தலைவர் ராஜா தலைமையில் 70க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்

இந்தப் பகுதியில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். ரெட்டிபட்டி பஞ்சாயத்தில் பல ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் கடந்த ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது பஞ்சாயத்து தலைவர் ராஜா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனுக்களை கொடுத்தனர்.

மாவட்ட நிர்வாகம் இதுவரையில் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை இதனைக் கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தை திரளான பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் விரைவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 2 May 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?