/* */

நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் முகா நடைபெறும் இடங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களை கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் முகா நடைபெறும் இடங்கள்
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் சிறப்பு முகாம்ள் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் உத்தரவின்பேரில், அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வகையில், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின், பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி, நாளை 24ம் தேதி புதன்கிழமை கீழ்க்காணும் கிராமங்களில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. நாமக்கல் தாலுக்கா பெரியப்பட்டி, கீழ்சாத்தம்பூர், ராமநாய்க்கன்பட்டி, லக்கபுரம் கிராமங்கள்.

சேந்தமங்கலம் தாலுக்கா பொட்டிரெட்டிபட்டி, நடுக்கோம்பை, எருமப்பட்டி கிராமங்கள். ராசிபுரம் தாலுக்கா வடுகம், ஆர்.புதுப்பட்டி, கல்லாங்குளம், ஆயில்பட்டி கிராமங்கள். மோகனூர் தாலுக்கா மோகனூர், வடவத்தூர், எஸ்.வாழவந்தி கிராமங்கள். திருச்செங்கோடு தாலுக்கா எஸ்.இறையமங்கலம், முசிறி, பிள்ளாநத்தம், கொன்னையார், அவிநாசிபட்டி கிராமங்கள்.

பரமத்தி வேலூர் தாலுக்கா மாணிக்கநத்தம், மணியனூர், பிலிக்கல்பாளையம், இ.நல்லாக்கவுண்டம்பாளையம் கிராமங்கள். குமாரபாளையம் தாலுக்கா கலியனூர் அக்ரஹாரம், சவுதாபுரம் ஆகிய கிராமங்களில் நாளை பட்டா மாறுதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

மேற்படி கிராமங்களில் உள்ள பொதுமக்கள், இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய பட்டா மாறுதல் மற்றும் இதர கோரிக்கைகைளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Nov 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!