/* */

சுற்றுச்சூழலை பாதுகாக்க மஞ்ச பைகளை உபயோகியுங்கள்: அமைச்சர் மதிவேந்தன் வேண்டுகோள்

நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சப்பைகளை உபயோகிக்க வேண்டும். அமைச்சர் மதிவேந்தன் வேண்டுகோள்.

HIGHLIGHTS

சுற்றுச்சூழலை பாதுகாக்க மஞ்ச பைகளை உபயோகியுங்கள்: அமைச்சர் மதிவேந்தன் வேண்டுகோள்
X

நாமக்கல் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் மஞ்சப்பைகளை வழங்கினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி ராஜேஷ்குமார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், நாமக்கல் மாவட்ட மக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மஞ்சப் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் மதிவேந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதையொட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. எம்.பி ரா÷ஷ்குமார் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மஞ்சப்பைகளை வழங்கி பேசியதாவது:

மஞ்சள் பை பயன்பாடு முடிந்தததும் மக்கி முற்றிலும் இயற்கைக்கு பாதிப்பு இல்லாமல் அழிந்து விடுகிறது. ஆனால் பிளாஸ்டிக் மக்காது. ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் இன்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது, உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது ஆகியவை தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் மட்டும் நினைத்தால் இதனை செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும். நாமக்கல் மாவட்ட மக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை நிராகரித்து மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, சுற்றுச்சூழலைக் காப்பதிலும் முன்னிலை மாநிலமாக திகழ வேண்டும் என்று அவர் கூறினார்.

நாமக்கல் சப் கலெக்டர் மஞ்சுளா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...