/* */

நாமக்கல்லில் தக்காளி விலை கடும் உயர்வு: ஒரு கிலோ தக்காளி ரூ.120

நாமக்கல் பகுதியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் தக்காளி விலை கடும் உயர்வு: ஒரு கிலோ தக்காளி ரூ.120
X

பைல் படம்.

நாமக்கல் பகுதியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து, தினசரி தக்காளி லாரிகள் மூலம் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக அங்கு அடிக்கடி மழை பெய்து வருவதால் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டு தக்காளி வரத்து குறைந்துள்ளது. நாமக்கல் பகுதியிலும் தக்காளி விளைச்சல் இல்லை. இதனால் கடந்த வாரம் ரூ.60க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி படிப்படியாக உயர்ந்து இன்று ஒரு கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 21ம் தேதி சனிக்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்.

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் 28, தக்காளி வரத்து இல்லை. வெண்டைக்காய் ரூ.26 முதல் 30, அவரை ரூ.40 முதல் 48 , கொத்தவரை ரூ.30, முருங்கைக்காய் ரூ. 40 முதல் 60, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.36 முதல் 40, பாகல் ரூ. 40, பீர்க்கன் ரூ.40 முதல் 60, வாழைக்காய் ரூ.28, வழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 30 , தேங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ. 180, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.16 முதல் 18, பெ.வெங்காயம் ரூ.20 முதல் 24, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.76 முதல் 84, கேரட் ரூ.36 முதல் 40, பீட்ரூட் ரூ.24 முதல் 50, உருளைக்கிழங்கு ரூ. 28 முதல் 32, சவ்சவ் ரூ.28 முதல் 32, முட்டைகோஸ் ரூ. 16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 20, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.40, புதினா ரூ.40, இஞ்சி ரூ.35, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.24 முதல் 30, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.35, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, சேனைக்கிழங்கு ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ. 28 முதல் 32, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60. கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.32 முதல் 40, தர்பூசணி ரூ.10, விலாம்பழம் ரூ.40.

Updated On: 21 May 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...